முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) விண்ணப்பம் பெறுதல்/சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட பரிந்துரைகள் செய்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் 19.8.2023(நாளை) அன்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 16.9.2023 அன்று திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் 23.9.2023 அன்று ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக 19.8.2023 அன்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறாத மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை நகல், மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறவும், மேலும் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற UDID அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால் UDID அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.