Skip to content
Home » நடுவானில் மாரடைப்பில் விமானி பலி…..பத்திரமாக விமானம் தரையிறக்கம்

நடுவானில் மாரடைப்பில் விமானி பலி…..பத்திரமாக விமானம் தரையிறக்கம்

அமெரிக்காவில் உள்ள  புளோரிடா மாநிலம் மியாமி நகரில்  இருந்து சிலி  நாட்டுக்கு  271 பயணிகளுடன் லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாத்ரூமுக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து விமானம் உடனடியாக பனாமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பைலட்டை பரிசோதனை செய்தனர். அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த பைலட் மறைவுக்கு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானி இறந்ததையடுத்து விமானம் பனாமா சிட்டி விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை சிலி நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!