திமுக தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ராமநாதபுரம் தேவி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் அருகே இன்று நடைபெறுகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி மேற்கு, மதுரை மாநகர்,
மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இந்த பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.