Skip to content
Home » வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தினர். இதன் புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 5-ம் தேதி சந்திரனின் வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து, நிலவில் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திரயான் – 3 கடந்த 6, 9, 14 ஆகிய தேதிகளில் குறைக்கப்பட்டது. தற்போது சந்திரயான் விண்கலம் சுற்றுவட்டப் பாதை நான்காம் முறை குறைக்கப்பட்ட நிலவை நெருங்கி வருகிறது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த 26 நாட்களுக்கும் மேலாக பூமியிலிருந்து நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி  மதியம் 1.30 மணியில் இருந்து 2 மணிக்குள்  நிலவின் மேற்பரப்பில் லேண்டெர் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஞ்ஞானிகள் வகுத்த திட்டத்தின்படி தற்போது சந்திரயான்3  விண்கலம் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவிக்கிறது. அதற்கு சாட்சியாக சந்திரயான் விண்கலத்தில் உள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் எடுத்த புகைப்படங்களின் தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 1-ம் தேதி விண்கலம் பூமி சுற்றுப் பாதையை நிறைவு செய்தது. இதையடுத்து நிலவு சுற்றுப் பாதையை நோக்கிச் சென்றது. ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 7.15 மணியளவில் விண்லகம் வெற்றிகரமாக நிலவு சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது விண்கலத்தின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரின் அடிப்பகுதியில் உள்ள கிடைமட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் நிலவில் காணப்படும் பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் முன்பகுதியிலுள்ள மற்றொரு கேமரா மூலம் பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *