‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக நீரைச் சேமிப்பதன் அவசியம்,நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்தும்,ஒவ்வொரு துளி நீரின் முக்கியம் அதற்கு நமது ஒவ்வொருவரது பங்களிப்பும் அவசியம் குறித்து வலியுறுத்தும் தெரு நாடகம் நடைபெற்றது. தொடந்து பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பதாகிய எழுதியபடி
நீரின் அவசியத்தை குறித்தும்,எவ்வாறு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் அவற்றின் நன்மைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
500-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியானது கரூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளான ஜவகர் பஜார் வழியாக சென்று நகர காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.