Skip to content
Home » டூவீலர் மீது கார் மோதி விபத்து… நர்ஸ் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்..

டூவீலர் மீது கார் மோதி விபத்து… நர்ஸ் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்..

திருச்சி, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. இவர் பெரிய மிளகு பாறை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக  பணியாற்றி வருகிறார். சந்திரா நேற்று தனது பணி முடிந்து டூவீலரில் மஞ்சதிடல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று சந்திராவின் டூவீலரில் மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த சந்திராவுக்கு பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக திருச்சு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கரூர் மாவட்டம், கீழ்வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!