கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொள்ளாச்சி ஏ எஸ் பி பிருந்தா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர், விசாரணையில் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த அருண்,சந்திரா புரத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சூரிய பிரகாஷ் அரவிந்த் மூவரும் நண்பர்கள் நேற்று இரவு மூவரும் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பொள்ளாச்சியை சேர்ந்த அருணை இருவரும் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது,மேலும் மூவருக்கும் போதை பழக்கம் உள்ளதால் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…
- by Authour
