நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று தலைநகர் டில்லியில், நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது. இதில் தோல்வி அடைந்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து பாஜக இப்போதே சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. பிரதமரும் மேற்கண்ட மாநிலங்களுக்கு சென்று அரசு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடைபெறும் தேர்தல்குழு கூட்டம் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.