அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பேருந்து இலவச பயண அட்டை ,தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, சிறு வணிக கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், இலவச வீட்டு மனை பட்டா, ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.
மாற்று திறனாளிகளுக்கான கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த் துறையினர் ,50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.