நாடு முழுவதும் உற்சாகமாக 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரபல நடிகர்,தயாரிப்பாளர்,தற்காப்பு கலை வல்லுனர்,சமூக சேவகர்,வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸ் கலந்து கொண்டார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைத்த சுதந்திர தின விழாவில் ஏழை எளிய குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கொடியேற்றிய நடிகர் பிரதீப் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், அந்த பகுதியில் வசிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்..எல்லோரிடமும் எளிமையாக பழகும் வள்ளல் சக்கரவர்த்தியின் இந்த செயல் கோவை மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..
- by Authour