சுதந்திர தினத்தை முன்னிட்டு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி சங்கர் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தேசியக் கொடியேற்றினார். இதில் உறுப்பினர்கள் விஜயன், சுரேஷ், சரவணபாபு உட்பட பங்கேற்றனர். ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் தேசியக் கொடியை தலைவர் செல்வக் குமார், ஏற்றினார். இதில் செயலர் முருகவேலு, பொருளாளர் ரவிச் சந்திரன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், சரவணன், அறிவழகன், விவேகானந்தம், சேவியர், அன்பழகன் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் பாபநாசம் பெனிபிட் பண்ட் வளாகத்தில் தேசியக் கொடியை தலைவர் ராஜா முகம்மது ஏற்றினார். இதில் செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, நவநீத கிருஷ்ணன், மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், சாப் ஜான், முத்தமிழ்ச் செல்வம் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் அரசு மருத்துவமனையில் தேசியக் கொடியை தலைமை மருத்துவர் குமரவேல் ஏற்றினார்.
இதில் மருத்துவர்கள் ராஜசேகர், நிர்மல் குமார், செவிலியர்கள் உட்பட பங்கேற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்தில் தேசியக் கொடியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் ஏற்றினார். பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேசியக் கொடியை தலைமையாசிரியர் மணியரசன் ஏற்றினார். இதில் என்.சி.சி அலுவலர் சரவணன், உடற் கல்வி ஆசிரியர் செல்வக் குமார் உட்பட
ஆசிரியர்கள் பங்கேற்றனர். என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. 10, 11, 12 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில், தேர்வில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலர் கண்ண தாசன் பரிசு வழங்கினார். வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடியை ஜெயராஜ் ஏற்றினார்.
இதில் பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியைகள் தீபா, சங்கீதா, தையல் நாயகி உட்பட பங்கேற்றனர். பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு உள்ளிட்டப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் ஏற்றினார். இதில் பள்ளித் தலைமையாசிரியர் சுரேந்திர நாத் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் ரயில் நிலைய வளாகத்தில் தேசியக் கொடியை வர்த்தக சங்கத் தலைவர் குமார் ஏற்றினார். இதில் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் உட்பட பங்கேற்றனர். உதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடியை கொத்த மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி ஏற்றினார்.