அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராமத்தில் “சுதந்திர தினவிழாவையொட்டி” இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் (பொ) ஆறுமுகம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அஜித்தா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அன்பரசி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.