பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வரும் அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக கனடா நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருந்தார். அது சார்ந்து அவர் மீது பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.