தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், சிறந்ித நகராட்சிகளுக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது.
பொது சுகாதாரம், முறையாக குடிநீர் வழங்குதல் – திடக்கழிவு மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள், பயோ மைனிங் முறைப்படி குப்பை கிடங்கை சுத்தம் செய்வது,நகர அமைப்பு பணிகள்,நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள் போன்ற 13 சிறப்பு அம்சங்களை ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழ் நாட்டில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பிடித்தது. சென்னையில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் இதற்கான விருது மற்றும் ரொக்க பரிசினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.