2023-2024 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28 சதவீதம்பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவதாக உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 14 சதவீதம்பேர், பெண்கள் ஆவர். பெண்கள் புகையிலை பயன்படுத்துவதால், அவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. குழந்தைப்பேறு பாதிக்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் வாங்கி பயன்படுத்துவதை தடுக்கவும், அவர்களது உடல்நிலையை பாதுகாக்கவும், பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை கணிசமாக உயர்த்துமாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:சீதாராமன்