இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதிகள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டின் பிரதமராக சுதந்திர தினத்தன்று 10-வது முறை பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
உலகிற்கே மிகப்பெரிய நம்பிக்கையை இந்தியா விதைத்துள்ளது. தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளங்களை கொள்ளையடித்தனர். தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் நமது கவனம் உள்ளது. மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது, மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்,
நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை. நக்சல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தடையை நாங்கள் நீக்கியுள்ளோம்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. இளைஞர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தி செல்கின்றனர். தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்து கொள்ளும் திறனை இந்தியா தற்போது பெற்றுள்ளது. இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு உலக அரங்கிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகியுள்ளனர்.
140 கோடி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செயய கடுமையாக உழைத்திருக்கிறேன். மக்கள் நம்பிக்கையை காப்பாப்ற பெருமையோடும், மகிழ்ச்சியோடும் செயல்படுகிறேன். 2047ல் இலக்குகளை அடைய அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியம். நான் உங்களில் இரந்து வந்தவன். உங்களுக்காகவே வாழ்கிறேன். எனது கனவு கூட நாட்டு மக்களின் நலன் குறித்தே வருகிறது. நான் கனவு கண்டால் கூட உங்களுக்காகவே கனவு காண்கிறேன். நீங்கள் தான் என் குடும்பம். நீங்கள் துக்கப்படுவதை என்னால் பொறுத்துக்ெ காள்ள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். உரையின் நிறைவில் பாரத் மாதாகீ ஜே, வந்தேமாதரம் என முழக்கமிட்டார் பிரதமர் மோடி.