77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடி ஏற்றி வருகிறார்.
முன்னதாக டெல்லியில் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி. பின்னர் ராணுவ வீரர்களின் பாதுகாப்போடு செங்கோட்டை வந்தடைந்துள்ளார் பிரதமர் மோடி. அங்கு முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி இந்திய தேசிய கோடியை செங்கோட்டையில் ஏற்றினார். அதன் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரவுள்ளதால் தற்போது பிரதமர் உரை உற்றுநோக்கப்படுகிறது.