மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. இதை அடுத்து அதிமுகவினர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை மற்றும் பிற இடங்களில் கட்டவுட்கள் பொதுமக்கள் பார்வை படும் இடங்களில் வைத்துள்ளனர். மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராட்சஷ பலூன் பறக்க பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆச்சி பட்டியில் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது,போலீசார் முறையாக அனுமதி வாங்கி பலூன் பறக்க அனுமதி என தெரிவித்தனர்,சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன்,கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்,அனுமதி கடிதம்
இருந்தால் மட்டுமே பலூன் பறக்க முடியும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தாலுகா காவல் நிலையம் சென்றுள்ளனர், சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கூறுகையில் கடந்த சில வருடங்களாக தனியார் நடத்தும் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது,தனியார் இடத்தில் பலூன் பறக்க காவல்துறையினர் தடை விதிக்க காரணம் இல்லாமல் கூறுகின்றனர், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டன் கணக்கில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது இதை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் இந்த மாநாட்டின் மூலம் விடிய அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் எனவும் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி விரைவில் வரும் என தெரிவித்தார், காவல்துறை அனுமதி தரவில்லை என்றால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் ஈடுபடுட போவதாக தெரிவித்தார்.