கேரள மாநிலத்தில் கோயில் விசேஷங்களில் பங்கேற்க யானைகள் அழைத்து வரப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே உள்ள கிழக்கஞ்சேரி என்ற பகுதியில் இடுவாரா என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக புத்தூர் தேவி சுதன் என்ற பெயரிடப்பட்ட யானை உட்பட 3 யானைகள் திருவிழாவிற்காக வரவழைக்கப்பட்டிருந்தது. யானையின் மீது கோயில் ஊழியர்கள் சாமியை வைத்து ஆராட்டு நிகழ்ச்சிக்காக வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேவி சுதன் யானைக்கு மதம் பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகன், யானையை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதனை கட்டுப்படுத்த
முடியவில்லை. இதனால் யானையின் மீது சாமி சப்பரத்தை சுமந்தபடி அமர்ந்திருந்த கோயில் ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள யானையின் மீது இருந்து கீழே குதித்தனர். அப்போதும் கட்டுக்கடங்காத யானை திடீரென உடன் வந்த மற்றொரு யானையை தனது தந்தத்தால் குத்தி தாக்க முயன்றது. தேவி சுதன் யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க யானையும் யானைப்பாகனுன் முயன்ற போதும் முடியவில்லை. இந்நிலையில் யானை
கட்டுக்கடங்காமல் சாலைகளில் மதம் பிடித்தபடி வலம் வந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது விலங்கின ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.