Skip to content
Home » அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

அனுவாவி கோவில் அடிவாரத்தில் காட்டுயானைகள்…பக்தர்கள் அச்சம்…

  • by Senthil

கோவை மாவட்டத்தில் மாங்கரை, தடாகம், பெரிய தடாகம், மருதமலை, வடவள்ளி ஆகிய பகுதியில் ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கி இருக்கலாம் எனவும் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!