Skip to content
Home » மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

மறைந்த திருச்சி இன்ஸ்பெக்டர் சிவா உள்பட 15 பேருக்கு சிறப்பு பதக்கம்…. முதல்வர் நாளை வழங்குகிறார்

  • by Senthil

மக்கள் சேவை மற்றும் புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் 8 கிராம் எடையில் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.  அதன் விவரம்:

1. திரு. க. வெங்கடராமன்,  கூடுதல் காவல் துறை இயக்குநர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை. 2. திரு அஸ்ரா கர்க், காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர். சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல். 

3 திரு. சு. ராஜேந்திரன., காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை. 4. ப.ஹீ. ஷாஜிதா. காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல். 5.  ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

6. . வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம். 7. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம். 8  ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

9.மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீளமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம். 10. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.

11.ரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

12  ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.

13.  அ.சித்ராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம். 14  ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.

15. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!