திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களிலும் செவ்வாய் ,வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத ஆடி அமாவாசை வருகின்ற 15ம் தேதி செவ்வாய்க்கிழமை 1.55 மணி முதல் 16ஆம் தேதி புதன்கிழமை 3. 50 வரை அமாவாசை நடைபெறுகிறது. இந்த நாட்களில் பக்தர்கள் அம்மாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணையான தகவல் தெரிவித்துள்ளார்.