நடிகர் சத்தியராஜின் தாயார் மறைந்த திருமதி நாதாம்பாள்(93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.l அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில்
சாமிநாதன் ஆகியோர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நடிகர் சத்தியராஜிற்கு ஆறுதல் கூறினர்.
உடன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர் பசுபதி, இளைஞரணி அமைப்பாளர் தனபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மறைந்த திருமதி நாதாம்பாள் உடல் அனைவரது அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பநாயக்கன் பாளையம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.