அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் காந்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேணுகா இவர் சனி ஞாயிறு விடுமுறைக்காக அல்லியூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காந்தி வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பால் உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அருகில் இருந்தவர்கள் ரேணுகாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பார்த்த போது ட்ரங்கு பெட்டியில் வைத்திருந்த 2 சவரன் நெக்லஸ் உள்ளிட்ட மூன்று சவரன் நகை மற்றும் 3000 பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதேபோல் அருகில் இருந்த டாஸ்மாக் லோடுமேன் வேல்முருகன் வீட்டின் முன்பக்க தாழ்ப்பாலை உடைத்து வீட்டில் இருந்த 2 கொலுசு 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி
சென்றனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.சுமார் 2 லட்சம் மதிப்பிலான நகை பணம் உள்ளிட்டவைகளை வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.