தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இரவு குளித்த காற்றுடன் திடிர் என இடியுடன் கனமழை பெய்தது, மாவட்டத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பரவை, ,விழுந்தமாவடி, காமேஸ்வரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரன்இருப்பு, திருக்குவளை வலிவலம், கீழ்வேளூர்
உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மித கனமழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் தற்போது குறுவை சாகுபடி க்கு போதிய தண்ணீர் இல்லாமல் கருகி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.