திருச்சி மாவட்ட மையநூலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நூலக தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையேற்று, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும், அதிக நன்கொடைகள் பெற்றவர்கள் மற்றும் முனைப்புடன் செயலாற்றிய
நூலகர்களுக்கு கேடயங்களையும் வழங்கி, சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், வாசகர் வட்ட தலைவர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.