பெரம்பலூர் மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள சூர்யா நகர் மதரஸா ரோடு சாலையில் வசித்து வருபவர் ரஜியா பேகம் 75 கணவர் அப்துல் அஜீஸ் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வந்துள்ளனர் .ஆண் ரஜியா பேகத்தின் தலையில் அடித்தும் கூட வந்த பெண் ஐந்து பவுன் தங்க வளையலை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றார். ரஜியா பேகத்தின் உறவினர்கள் எதேர்ச்சியாக வந்து பார்த்த பொழுது ரத்த காயங்களுடன் கீழே கிடந்ததைக் கண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் தலையில் எட்டு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் தனியாய் இருக்கும் மூதாட்டியை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தாக்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.