Skip to content

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி..

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி மாஹே மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை மற்றும் மூத்த கைப்பந்து பயிற்சியாளரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான டாக்டர் டேவிட் மேத்யூ, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 85 மாணவிகள் உட்பட மொத்தம் 1202 மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான நேற்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 குழுவினர் மார்ச் பாஸ்ட் அணிவகுப்பு நடத்தினர்.

கல்லூரி முதல்வர் ஆரோக்கியாசாமி சேவியர் விருந்தினர்களையும் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரால் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. பல்வேறு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் அணிக் கொடிகளுடன் உறுதிமொழி எடுத்தனர். விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிர்ஷ்ட சக்கர போட்டி நடத்தப்பட்டது. 100 Mts டேஷ் மற்றும் 4 x 100 Mts தொடர் ஒட்டம் உட்பட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

சிறப்ப விருந்தினர் தனது உரையின் போது விளையாட்டு வீரர்கள் உறுதியும் நிலைத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவப் பருவத்தில் புனித ஜோசப் கல்லூரி வழங்கிய வாய்ப்பை நன்றியுடன் பாராட்டினார். மாணவர்கள் இலக்கை அடையவும், தங்கள் இலக்குகளை அடையவும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்ப விருந்தினர் பரிசுகள் வழங்கினார். பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ் துறையைச் சேர்ந்த இலக்கியா மற்றும் வீரர்களில் தனிநபர் சாம்பியன்ஷிப் டிராபியை கவுதமன் மற்றம் யூவான் பெற்றார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ஷிப்ட் 1மற்றும் ஷிப்ட் 2க்கு முறையே தமிழ் மற்றும் பொருளாதார துறைகள் வென்றன. மார்ச் பாஸ்ட் டிராபி மற்றும் ரொக்க பரிசினை வணகவியல் கானர்ஸ் துறை வென்றது.

நிகழ்வின் இறுதியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பெர்க்மான்ஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் அதிபர் பவுல்ராஜ் மைக்கில், கல்லூரி செயலர் அமல், இணை முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துணை முதல்வர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பிரேம் மற்றும் துணை இயக்குனர் ரெனில்டன் செய்திருந்தனர்.

விளையாட்டு விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!