சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இமயமலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம் அதன்படி கடந்த 9ம் தேதி அவர் சென்னையில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் என்ற
இடத்தில் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இந்த நகரம் கங்கை நதிக்கரையில் உள்ளது. அங்கு அவர் யோகா மற்றும் தியானங்கள் செய்து வருகிறார். அந்த ஆசிரமத்தில் உள்ள மாணவர்களுக்கு அவர் ஆன்மிக போதனைகளையும் செய்தார்.