Skip to content
Home » திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள முள் காட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருபானந்தம், தயாளன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மூன்று நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக மீட்டு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதேபோல் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடியான குட்ட பாலு என்பவர் தனது உபயோகத்திற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து குட்டபாலு மீது போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாகி இருக்கும் ரவுடி குட்டபாலுவை தேடி வருகின்றனர். தனது எதிர்கோஷ்டி ரவுடிகளை மிரட்டுவதற்காக குட்ட பாலு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து பதுக்கி வைத்திருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திடீர் நகர் பகுதியில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *