பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமயமாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலித்கிறிஸ்தவர்கள் கைகளில் கருப்பு கோடி ஏற்றி கருப்பு பேஜ் அணிந்து ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 யை நீக்கி நீதியரசர் ரெங்கநா மிஸ்ரா அறிக்கையை அமல்படுத்திட வேண்டுமென்றும் தலித்கிறிஸ்த்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்த்திட வேண்டுமென மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/08/thalith.jpg)