கரூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட கூறியும், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்திட வலியுறுத்தியும், கரூர் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் கல்குவாரிகளில் அனுமதியை மீறி அதிகளவு தோண்டுவதை நிறுத்தி கனிம வளத்தை பாதுகாக்க வேண்டியும், அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகளை கலப்பதை கண்டித்தும், விவசாய நிலத்தை அழிக்கும் என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் அரவை முத்து, புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.