பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி அடிக்கல் நாட்டினார்கள்.
அதனைத்தொடர்ந்து பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் காலணி பூங்கா அமைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது, தலைவர் ஜின்னா ரபீக் அஹமது தலைமையில், தைவான் நாட்டின் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் பிரிதிநிதிகள் எறையூர் சிப்காட் தொழில்பூங்கா உள்ள இடத்தினை நேரில் பார்வையிடுவதற்காக பெரம்பலுார் மாவட்டத்திற்கு வருகை தந்தார்கள்.
பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ,பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தைவான் நாட்டு தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, பெரம்பலுார் மாவட்டத்தில் காலணிபூங்கா அமைவதற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்காண்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேப்பந்தட்டை ஒன்றியம் எறையூர், வேப்பூர் ஒன்றியம் ஒதியம், திருமாந்துறை , துங்கபுரம் ஆலத்துார் ஒன்றியம் அந்துார் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டதையடுத்து, எறையூரில் ரூ.8லட்சம் மதிப்பில், ஒரு மணி நேரத்திற்கு 1000 லிட்டர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்தார்.
பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமது செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2022 அன்று சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார்கள். முதலமைச்சர் அவர்களின் உத்தரவாலும், மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பாலும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அடிக்கல் நாட்டப்பட்டு 6 மாதத்திற்குள் காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கான 60 சதவித பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக பெரம்பலுாரிலேயே மூலப்பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, காலணிகள் தயாரிக்கப்படவுள்ளது. கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழல் தொடங்க நிறுவனங்கள் வருகின்றார்கள். nike, adidas உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் பெரம்பலுார் மாவட்டத்தை நோக்கி வருகை தர உள்ளன. 3 வருடத்திற்குள் முழுமையான பணிகள் முடிக்கப்பட்டு இந்தியாவே பெரம்பலுார் மாவட்டத்தை திரும்பிப்பார்க்கும் வகையில் தொழிற்சாலை அமையவுள்ளது.
மொத்தம் 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் வகையில், ரூ.5000கோடி முதலீட்டில் சிப்காட் தொழில்பூங்கா அமையவுள்ளது. இதில் பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பில் 80 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனையினை தொடங்கி வைக்க டு முதலமைச்சர் அவர்களிடம் நேரம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தார்.