அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த
முனியப்பன் என்பவரை காதலித்து திருமணமான நிலையில் சில மாதங்களில் முனியப்பன் இறந்து விட்டார்.
இதனையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 11 லட்சம் ஜீவனாம்சம் தர நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 11,00,000 ராமகிருஷ்ணன் குடும்பத்தினரிடமிருந்து ராசாத்தி ஜீவனாம்சமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இராசாத்தி ஜீவனாம்சம் வழக்கு தொடர அவரின் முதல் கணவர் முனியப்பனின் தம்பி நாகராஜ் என்பவரின் மனைவி ரூபாவதி உதவியக சென்று வந்ததாகவும் அந்த வகையில் ரூபாவதிக்கு ரூ 1,50,000 செலவாகி உள்ளது என கூறி 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ராசாத்தியிடம் கேட்டுள்ளார். பணம் தர ராசாத்தி மறுத்த நிலையில் இது சம்பந்தமாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ராசாத்தி கோவில் எசனை to வெங்கனூர் சாலையில் வெங்கனூர் சுடுகாடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் . இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராசாத்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராசாத்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.