திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு) செல்வகுமார் துணை ஆணையர் (வடக்கு) அன்பு துணை ஆணையர் (தலைமையிடம்) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அஜீம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினார்கள். கண்டோண்மென்ட் உதவி ஆணையர் கென்னடி வரவேற்றார். கேகே நகர் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். போதைப் பொருள் ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயணிகள் வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.