பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ” சுலு ” நாட்டின் மாட்சிமை மிகுந்த மன்னரின் பிறந்த தின விழா நேற்று மாலை மணிலா நகரில் சீறும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வில் அந்நாட்டு அரசு அழைப்பின் பேரில் நீதியரசர் டாக்டர் எம்.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவ்விழாவில் மன்னரும், அரசியாரும் , நீதியரசரின் நேர்மை, ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு உதவி, எல்லோரையும்
ஒன்றாகப் பாவிக்கும் மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் மிகச்சிறந்த ‘ டத்தோஶ்ரீ’ விருதை வழங்கிகௌரவித்தார்கள் விழாவிற்கு வந்திருந்த பல நாட்டு பிரமுகர்களும் நீதியரசருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த நாட்டின் ‘டத்தோஶ்ரீ’ விருதினைப் பெறும் முதலாவது இந்தியர் நமது காரைக்குடி அருகே உள்ள ஆறாவயல் தமிழர் நீதியரசர் எம்.சொக்கலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருதை அவர் பெற்றிருப்பது அவரது குடும்பத்தாருக்கும், நகரத்தார் சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. நீதியரசர் எம்.சொக்கலிங்கத்திற்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் நகரத்தார்களும்,சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.