மத்திய அரசின் மீது இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியது. 2ம் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசத்தொடங்கினார். அப்போது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் குரல் எழுப்பினர். ஆனாலும் ராகுல் நிதானம் தவறாமல் உரை நிகழ்த்தினார். இதுவரை நாடாளுமன்ற உரையை கேட்காத மக்களும் இன்று ராகுல் பேச்சை டிவி மூலம் பார்த்தனர். இந்தியில் ஒளிபரப்பபட்ட போதும், அதையும் மக்கள் பார்த்தனர்.
ராகுல் காந்தி பேசியதாவது…. நான் யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. அதானியைப்பற்றி நான் பேசமாட்டேன். மோடி- அதானி உறவு பற்றி பேசமாட்டேன். எனவே யாரும் அச்சப்படவேண்டாம். பாஜகவினர் நிம்மதியாக இருக்கலாம். நான் 130
நாள் ஒற்றுமை யாத்திரை சென்றேன். மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, “அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை” என்றும் கூறினார்.
“மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர. துரோகிகள்” என்றார் . இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் ராகுல் கூறியதாவது …. “கடந்த ஆண்டு 130 நாட்கள் இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்றேன். தனியாக இல்லை, பலருடன் சென்றேன். யாத்திரையின் போது பலரும் என்னிடம் ராகுல் ஏன் நடக்கிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டனர். ஏன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்கிறீர்கள் என்று கேட்டனர். இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பினேன்.
தினமும் 10 கிலோமீட்டர் ஓடுவேன். அதனால் 25 கிலோமீட்டர் நடப்பதில் என்ன பெரிய விஷயம் என்று நினைத்தேன். பயணத்தின் போது விவசாயியின் கண்களில் இருந்த வலி, என் கண்களுக்குப் புலப்பட்டது.”பிரதமர் மோடியைப் பொறுத்தவரை மணிப்பூர் என்பது இந்தியாவின் அங்கம் இல்லை” என்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல. துரோகிகள்” . எம்.பி. தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி. நான் எனது மனதில் இருந்து தான் பேசுகிறேன் இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆண்டில் அதிகமான மக்கள் பார்த்த நாடாளுமன்ற உரையாக இது அமைந்தது என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.