திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர், நேரு நகர், ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 வருடமாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மந்தமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. சாக்கடை பணியை கண்டித்து பொதுமக்கள் ஜேசிபி வாகனத்துடன் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும்
சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.