கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ,மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியதாவது…. கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார் எனவும், அவரது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு
இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் யார் என்பது இப்பொழுது முக்கியமான விசயமா ? எல்லாவற்றிக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது என பதிலளித்தார்.
கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7 ம் தேதி தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவரது வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கின்றேன். கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள் , அவரைப் பற்றி நன்றாக தெரியும் எனவும், வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம் எனவும் தெரிவித்தார்.
பேசன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள், இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது எனவும், இப்படி ஒரு சட்ட விதி இருக்கிறதா? சின்ன சிரிப்பே இல்லாமல் பொதுவாக எல்லா பேசன் ஷோக்களிலும் பார்க்க முடிகின்றது எனவும் தெரிவித்தார். மேலும் ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை, ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும் எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் எனவும், இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும் எனவும், எனக்கு புடவை தான் எல்லை என தெரிவித்தார்.