புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்யாணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (7.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மின்னணு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ராம்கணேஷ், நமச்சிவாயம், தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.