Skip to content
Home » மோடியின் தாயார் விரைவில் குணமடையவேண்டும்…..முதல்வர் ஸ்டாலின்

மோடியின் தாயார் விரைவில் குணமடையவேண்டும்…..முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்  வேண்டுதல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும்” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!