சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர் தமிழகத்திற்கு வருவது இது முறையாகும். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூர் வந்தடைந்த குடியரசுத் தலைவர் பின் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆவண படத்தில் இடம்பெற்ற பொம்மை – பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார். இதையடுத்து மைசூர் விமான நிலையம் செல்லும் குடியரசுத் தலைவர் இன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நீலகிரி வந்தடைந்தார். நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. அங்கு ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளியையும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சந்திக்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மசினகுடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.