புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை,லேணா.விளக்கு முகாமில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அறிவுரையின் படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு, கற்பித்தல் ஆகிய விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தோப்புக்கொல்லை, லேணா.விளக்கு ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாம்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்கள் நடந்தது. அத்தோடு கராத்தே
கலை பயிற்சியாளர்கள் ஆதி,ரவீந்திரன் ஆகியோர்கள் கராத்தே கலை தற்காப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி பயிற்சி அளித்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே தலைமையில் குழந்தைகடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கே.வைரம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ.மெய்யம்மாள், தலைமைக்காவலர் டி.பாலாஜி, காவலர்கள் அம்பாள், தாமரைச்செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் சிறுபான்மை சமூக பெண்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கங்களை வளர்க்கும் பொருட்டு சிறப்பு விழிப்புணர்வு முகாம்களை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.