தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்க ரத வாகனத்தில் மாரியம்மனை கொலுவிருக்க
செய்தனர். அதன் தொடர்ச்சியாக மாரியம்மனுக்கு ஆலயத்தின் பூசாரி தூப தீபங்கள் காட்டிய பின் மகா தீபாராதனை காட்டினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து மாரியம்மன் தங்க தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் ஸ்வாமி தங்க தேரோட்டம் ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தங்க தேரோட்ட நிகழ்ச்சியை கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.