பெரம்பலூர் மாவட்ட திமுகழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும், அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்து பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் வரும் (7.8.2023) திங்கட்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக செயல் வீரர்களும் அமைதி ஊர்வலமாக சென்று தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டுகிறேன் என்று இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.