தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை’ . விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார்.மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்கிறது. அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.