திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் ஆடி 18ஐ முன்னிட்டு
ஆதி அறப்பளீஸ்வரர் உடனுறை தாயம்மாள் சன்னதியில்
மகா குரு பூஜை விழா நடைபெற்றது. காலை ஐந்து முப்பது மணி அளவில் கோ பூஜையுடன் ஆரம்பமானது பின்னர் சித்தர்களின் சூட்சம வேள்வி,
திருவிளக்கு பூஜை,108 சங்கு பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து
அன்னலிங்க பூஜை நடைபெற்றது . பின்னர் பக்தர்களுக்க் அமுது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை ஏற்று நடைத்தி வைத்தார். மன்னார்குடி ஸ்ரீசென்டலங்கார செண்பகராஜா மன்னர் சம்பத்குமார் ராமானுஜ ஜியர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். துறையூர், தம்மம்பட்டி, ஆத்தூர், திருச்சி, நாமக்கல் ஆகிய பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.