திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 63 வயதான சுப்பு. இவர் நேற்று சனமங்கலம் எம். ஆர். பாளையம் சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த 45 வயதான குமார் மினி பேருந்தை ஓட்டிக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சணமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மினி பேருந்து மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த முதியவர் சுப்பு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழர்ந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.