ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் வேம்பு மாரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேம்பு மாரியம்மன் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு, ஆடி 18 முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரமான கரன்சி நோட் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கரன்சி நோட் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதிக்காக இந்த அலங்காரம் இரண்டு நாட்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.