2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் நாவல்களுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. இது சேத்னா மாரூவின் முதல் நாவல் ஆகும்.
இந்த நாவல் கோபி என்ற 11 வயது சிறுமியின் கதையாகும். ஸ்குவாஷ் விளைாட்டு மீதான சிறுமியின் ஆர்வம் மற்றும் குடும்பத்துடனான அவளது பிணைப்பைச் சுற்றி கதை நகர்கிறது. புக்கர் பரிசை பெறுவதற்கான இறுதிப்பட்டியலில் இடம் பிடித்த 13 புத்தகங்களில் ‘வெஸ்ட்ரன் லேன்’ நாவலும் ஒன்றாகும்.